Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை அரசாங்கம் செவி சாய்க்கும் 

01/07/2025 07:48 PM

சுங்கை சிப்புட், 01 ஜூலை (பெர்னாமா) - நாட்டில் உள்ள தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்ய அரசாங்க உரிய நடவடிக்கை எடுத்து  வரும் வேளையில், தாய்மொழிப் பள்ளிகள் ஒருபோதும் கைவிடப்படாது என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ உறுதியளித்தார். 

பேராக் , சுங்கை சிப்புட்டில்  உள்ள டோவன் பி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு  வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

அண்மையில் சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இரு புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

டோவன்  பி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் நிலநிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. 

மேலும் பேசிய அவர், இப்பள்ளியின் வளர்ச்சிக்கு 50,000 ரிங்கிட்டை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

110 மாணவர்களைக் கொண்ட இப்பள்ளிக் கூடத்தில் இடப் பற்றாக்குறையைத் தீர்க்க  புதிய பள்ளி அல்லது கூடுதல் வகுப்பறை தேவைகளை துணை அமைச்சரின் கவனத்திற்கு முன் வைத்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் ராஜம்மாள் வீராசாமி கூறினார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)