Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

துன் டைம்மிற்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்ய எஸ்.பி.ஆர்.எம் விண்ணப்பம்

25/06/2025 06:11 PM

புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) - மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் சைனுடிக்குத் தொடர்புடைய மெனாரா ஹில்ஹாம் கட்டிடத்தின் சொத்து பறிப்பு விண்ணப்பத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ளது.

துன் டைம் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் நைமா அப்துல் காலிட் உட்பட மேலும் சிலருக்குச் சொந்தமான நாட்டிலுள்ள பிற சொத்துகள் மீதும் அதே விண்ணப்பத்தைத் தங்கள் தரப்பு தொடரும் என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார். 

"இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இன்னும் ஒரு அல்லது இரண்டு வாரங்களுக்குள் மெனாரா இல்ஹாமின் உரிமை பறிக்கப்படும். நாட்டிலுள்ள சொத்துகள் தொடர்பாக துன் டைம், நைமா மற்றும் பிறரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பமும் தாக்கல் செய்யப்படும். நிறைவடையும் வரை இந்த முயற்சி தொடரும்," என்றார் அவர்.

70 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகம் மதிப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கும் துன் டைம், மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் சொத்துக்கள் மீது தடை உத்தரவு ஒன்றை எஸ்.பி.ஆர்.எம் பெற்றிருப்பதாக, அவர் கூறினார்.  

இவ்விவகாரம் குறித்து பிரிட்டன் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் தங்கள் நாட்டிலுள்ள நீதிமன்றத்தில் அதே விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய ஒப்புக் கொண்டதாக, டான் ஶ்ரீ அசாம் பாக்கி விளக்கினார்.

2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் எதிர்ப்பு சட்டம் மற்றும்  கள்ளப் பண பரிமாற்றம் எதிர்ப்பு சட்டம் செக்‌ஷன் 53-இன் கீழ் எஸ்பிஆர.எம் முன்னதாக உத்தரவு ஒன்றை பெற்றிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)