கோலாலம்பூர் , 06 ஜூலை (பெர்னாமா) - ஜூலை எட்டு தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், AMM மற்றும் அது தொடர்புடைய கூட்டங்களுக்கான தயாரிப்பில் ஆசியான் மூத்த அதிகாரிகள் கொண்ட வரைவு செயற்குழு கூட்டம் SOM இன்று நடைபெற்றது.
58-வது AMM-இன் முக்கிய ஆவணமாக இருக்கும் கூட்டு அறிக்கை குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டு இறுதி செய்வதில் இந்த வரைவுக் செயற்குழு கூட்டம் கவனம் செலுத்தியது.
வட்டார ஒருங்கிணைப்பு, சமூக மேம்பாடு உட்பட பொதுவான நலன்களாக இருக்கும் வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டு நிலைப்பாட்டையும் முடிவுகளையும் கூட்டு அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இக்கூட்டத்தில், ஆசியான் நாடுகள், ஆசியான் செயலகம் உட்பட Timor-Leste அதிகாரிகளும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)