நியூ ஜெர்சி, 06 ஜூலை (பெர்னாமா) -- கிளப்புகளுக்கு இடையிலான உலக கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் தேர்வாகியது.
இன்று அதிகாலை பொருசியா டோர்ட்மண்ட்டுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3-2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.
அமெரிக்கா, நியூ ஜெர்சியில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் இரு கோல்களை அடித்து ரியல் மாட்ரிட் முன்னணி வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் பொருசியா டோர்ட்மண்ட் முதல் கோலை அடித்த நிலையில் 94-வது நிமிடத்தில் கிலியான் ம்பாப்பே மூலம் ரியல் மாட்ரிட் தனது வெற்றி கோலை அடித்தது.
அதனை தொடர்ந்து ஆட்டம் முடிவடைய சில வினாடிகளே எஞ்சியிருந்த நிலையில் பினால்டி வழி பொருசியா டோர்ட்மண்ட் தனது இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]