ரியோ டி ஜெனிரோ, 07 ஜூலை (பெர்னாமா) -- உலக வர்த்தக அமைப்பு W-T-O-வின் விரிவான சீர்திருத்தத்தை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது.
எதிர்காலப் பிரச்சனைகளைக் களைவதற்கு, அந்த அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு AI, இலக்கவியல் வர்த்தகம் மற்றும் பருவநிலை கொள்கை போன்ற விவகாரங்களை உட்படுத்தி, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் விவரித்தார்.
W-T-O-வின் இயக்குநர் டாக்டர் நகோசி ஒகோன்ஜோ-இவேலாவை சந்தித்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
தற்போதுள்ள உலகளாவிய வர்த்தக சவால்களை எதிர்கொள்வதில் அமைப்பின் பங்கு குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், பன்முகத்தன்மைக்கான மலேசியாவின் அர்ப்பணிப்பையும், உலக வர்த்தக அமைப்பு உள்ளடக்கியுள்ளதோடு, அனைத்திற்கும் பதிலளிக்கக் கூடிய நிலையிலும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)