ரியோ டி ஜெனிரோ , 07 ஜூலை (பெர்னாமா) -- இந்தியாவின், வட்டார பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான மேம்பாடு எனப்படும் மஹாசாகர் தூரநோக்கு சிந்தனைக்கும் கிழக்கு நோக்கிய கொள்கைக்கும், மலேசியா முக்கிய பங்கு வகிக்கும் நாடாக கருதப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கின்றார்.
பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிநிலை மாநாட்டின் போது, மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்ததாக @narendramodi என்ற தனது X பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அன்வாரின் இந்திய வருகைக்குப் பின்னர், ஏற்பட்ட முன்னேற்றங்கள் உட்பட இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட மேம்பாட்டை அவர்கள் பரிசீலித்ததாகவும் க மோடி கூறினார்.
தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் அச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)