Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

டெக்சஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 78-ஆக உயர்வு

07/07/2025 05:31 PM

டெக்சஸ் , 07 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்கா, டெக்சஸ்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ள வேளையில், அதில் 28 பேர் சிறார்கள் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதோடு, ஆற்றங்கரை முகாம்களில் உள்ள சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்களைத் தேடும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ள நிலைமை இன்னும் மோசமடையும் என்று அஞ்சப்படுவதால், தன்னார்வ குழுக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

டெக்சஸ்சின் மையப்பகுதியான Kerr மாவட்டத்தை வெள்ளம் அதிகம் பாதித்துள்ளது.

அம்மாவட்டத்தில் 28 சிறார்கள் உட்பட 68 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் அதிகாரி லாரி லீதா கூறியுள்ளார்.

இதனிடையே, டெக்சாஸ்சின் பிற பகுதிகளில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 41 பேர் இன்னும் காணவில்லை என்றும் அதன் ஆளுநர் Greg Abbott செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

அதேபோல, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வரும் யுவதிகளுக்கான Camp Mystic பகுதியும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாகும்.

அம்முகாமில் இருந்த 10 பேரும் ஆலோசகர் ஒருவரும் காணவில்லை.

அமெரிக்காவின் சுதந்திர தின விடுமுறையின் போது, மத்திய டெக்சாஸை பாதித்த கனமழை காரணமாக அருகிலுள்ள ஆறுகள் நிரம்பி வழிந்ததை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)