Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வரி விதிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் - MITI

08/07/2025 04:39 PM

பாரிஸ், 08 ஜூலை (பெர்னாமா) --   அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மலேசிய பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் விளக்கமளிக்க முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கிறது.

அதேவேளையில் இந்த வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் மலேசியா தொடர்ந்து பேச்சு வாத்தையை நடத்தும் என்று MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கோலாலம்பூருக்குப் பயணிக்கும்போது செய்தியாளர்களை சந்தித்த தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அதனைத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வாஷிங்டன் விதித்த வரியைக் குறைக்கும் முயற்சியில் மலேசியா, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுகளை நடத்தியது.

ஆக கடைசியாக ஜூன் 18 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)