பிரான்ஸ், 08 ஜூலை (பெர்னாமா) -- நாட்டில் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலும் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.
நாட்டின் தற்காப்பு துறைக்கான சொத்துகளையும் உபகாரணங்களையும் கொள்முதல் செய்வதிலும் அந்த உறுதிப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
இடைத்தரகர்கள் அல்லது தரகுத் தொகையை உட்படுத்தாமல், தற்போது அரசாங்கத்துடன் அரசாங்கம் G2G, எனும் அடிப்படையில் இந்த கொள்முதல் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
"ஆயுதங்களை வாங்குவது என்பது மக்கள் பணத்தை திருடுவதற்கான ஊழல் நிறைந்த வழியாகும். ஏனெனில், இது கேள்விப்படாத ஒன்று. நமது அடிப்படைக் கொள்கை என்ன? அரசாங்கத்திற்கு அரசாங்கம் நேரடியாகச் செல்ல வேண்டும். மேலும், விற்பனை பங்கு என்று அழைக்கப்படும் பணத்தை எடுப்பதையோ அல்லது வீணாக்குவதையோ தவிர்க்க வேண்டும்", என்றார் அவர்.
France 24 எனும் அனைத்துலக செய்தி அலைவரிசையின் நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)