ஜித்ரா, 08 ஜூலை (பெர்னாமா) -- கெடா, ஜித்ரா, ஜாலான் சுங்கை கோரோக்கில் ஆபத்துகளைத் தவிர்க்கும் விதமாக தடுப்பு வேலி மற்றும் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கும்.
ஜித்ரா மற்றும் ஜெர்லூனை இணைக்கும் அப்பாதையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து பொதுப்பணித் துறை தமக்கு விளக்கமளித்ததாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
ஜித்ரா, கம்போங் பொஹோர் காராங்கில் 12 வயது புத்ரி கிஷ்யா நூர் அயிசாட்டின் பாட்டியைச் சந்தித்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சுங்கை கோரோக் ஆற்றில் தாங்கள் பயணித்த காருடன் மூழ்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரின் குடும்பத்தில் புத்ரி கிஷ்யா மூத்த மகளாவாள்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)