Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பிரதமர் 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்

09/07/2025 10:53 AM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று, கோலாலம்பூர் மாநாட்டு மையம், கே.எல்.சி.சி.-இல் 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஏ.எம்.எம்.-ஐ தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், திமோர்-லெஸ்தே வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் டாக்டர் காவோ கிம் ஹோர்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை' என்ற கருப்பொருளுடன் ஆசியானின் மலேசிய தலைமைத்துவம் 2025 இன் கீழ் நடைபெறும் 58வது ஏ.எம்.எம் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களில், ஆசியான் உரையாடல் பங்காளிகள் மற்றும் துறைசார் உரையாடல் பங்காளிகளுடனான சந்திப்புகள் உட்பட 24 அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள் நடைபெறுகின்றன.

ஜூலை 8 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் சுமார் 1,500 பேராளகர்கள கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லங்காவியில் நடைபெற்ற ஏ.எம்.எம் கூட்டம், மியான்மருக்கு ஆலோசனை வழங்குதல், தென் சீனக் கடலில் நடைமுறை விதிகளின் முன்னேற்றம் குறித்த மதிப்பீடு, ஆசியானின் ஒற்றுமை மற்றும் மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான உறுதியை வழங்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)