Ad Banner
Ad Banner
Ad Banner
 

வர்த்தக சவால்களை எதிர்கொள்வதில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த ஆசியானிற்கு வலியுறுத்து

09/07/2025 11:09 AM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- உலகளாவிய புவிசார் அரசியல் சக்திகளால் அதிகரித்து வரும் வர்த்தக சவால்களை எதிர்கொள்வதில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், வியூக ரீதியாக செயல்படவும் ஆசியான் வலியுறுத்தப்படுகிறது.

நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தனிமைப்படுத்த, வரி, ஏற்றுமதி மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகள் போன்ற வர்த்தக கருவிகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய மாற்றத்தை உலகம் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எனவே, ஆசியான் உலகளாவிய நிலப்பரப்பை மருத்துவ ரீதியாகப் கண்டு, தொடர்ந்து குரல் எழுப்பவும், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியானின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை பரிந்துரைத்துள்ள அவர், தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் வெளியுறவு அமைச்சர்களும் பொருளாதார அமைச்சர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

"நாம் எதிர்கொள்ளும் உண்மை சூழலுடன் பொருந்தக்கூடிய ஒருங்கிணைப்புப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெளிப்புற அழுத்தங்களை நாம் கடந்து செல்லும்போது, ​​நமது உள் அடித்தளங்களை வலுப்படுத்த வேண்டும். நமக்குள் வர்த்தகம் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் அதிக முதலீடு செய்ய வேண்டும். மேலும், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதியுடன் மேம்படுத்த வேண்டும். வலுவான, அதிக இணைப்புள்ள ஆசியான் பொருளாதாரத்தை உருவாக்குவது என்பது வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு நமது ஏற்புடைத்தன்மையையும் மீள்தன்மையையும் நங்கூரமிடும் ஒரு வியூக கட்டாயமாகும்," என்றார் அவர்.

ஆசியான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பது, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான முதலீடு மற்றும் வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம், ஆசியானின் உள் அடித்தளங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வட்டார ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக, ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் திமோர் லெஸ்தே உள்ளிட்ட முக்கிய உரையாடல் பங்காளிகளை ஒன்றிணைத்து ஜூலை 8 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் உரையாற்றினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)