Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மாமன்னரின் உருவம் & குரலில் போலி காணொளி 

10/07/2025 11:55 AM

கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உருவம் மற்றும் குரலை போலவே போலி காணொளி ஒன்றை தயாரித்து பதிவேற்றிய முகநூல் கணக்கை ஜோகூர் அரச குடும்ப ஊடக மற்றும் தொடர்பு அலுவலகம், ஆர்.பி.ஓ கண்டறிந்துள்ளது. 

இவ்விவகாரம் குறித்து சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எனும் மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு லாபத்தை உறுதியளிக்கும் முதலீட்டு திட்டம் தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் குரலில் இந்த காணொளி முகநூல் வழியாகப் பகிரப்பட்டதை ஆர்.பி.ஓ கண்டறிந்தது.

எனவே, எப்போதும் விழிப்பு நிலையில் இருக்குமாறும் முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்களில் மோசடி கும்பல்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற போலி கணக்குகளால் எளிதில் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அந்த அலுவலகம் அறிவுறுத்தியது. 

அதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் ஒருவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரான செயல் என்று ஆர்.பி.ஓ குறிப்பிட்டது.

இந்தப் பொறுப்பற்ற செயலை மேற்கொண்ட தரப்பினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது திட்டவட்டமாகக் கூறியது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]