கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- இன்று இஸ்தானா நெகாரவில் நடைபெற்ற 29-ஆவது ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில் பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் சிராஜுடின் ஜமாலுலைல், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சலெஹுடின் பட்லிஷா மற்றும் நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முரிஸ் துவாங்கு முனாவிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கிளந்தான் பட்டத்து இளவரசர் தெங்கு முஹமட் ஃபக்ரி பெட்ரா, ஜோகூர் துங்கு தெமெங்கோங், துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம், பகாங் தெங்கு அரிவ் பெண்டாஹாரா தெங்கு முஹமட் இஸ்கண்டார் ரி'யாதுடின் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் சரவாக் மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார், மலாக்கா மாநில ஆளுநர் துன் டாக்டர் முஹமட் அலி ருஸ்தாம், சபா மாநில ஆளுநர் துன் முசா அமான் மற்றும் பினாங்கு மாநில ஆளுநர் துன் ரம்லி ஙா தாலிப்பும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதோடு, மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் மற்றும் சரவாக் மாநில முதலமைச்சர் பிரதிநிதியும் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆட்சியாளர்கள் கூட்டம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சலெஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமையில் நடைபெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)