Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஒய்மியாகோனில் வெள்ளம்; 100 வீடுகள் மூழ்கின

18/07/2025 06:29 PM

ஒய்மியாகோன், ஜூலை 18 (பெர்னாமா) -- ரஷ்யாவின் யகுதியா வட்டாரத்தில் உள்ள உலகின் மிகக் குளிர்ந்த குடியிருப்பு பகுதியான ஒய்மியாகோன் மற்றும் அதை சுற்றியுள்ள சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கனமழையால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிந்து, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு, சுமார் 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

அங்கு வசித்த சுமார் 100 உள்ளூர்வாசிகளும் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர்.

ஒய்மியாகோன் குளிரின் வட துருவம் என்று அழைக்கப்படுகிறது.

அங்கு குளிர்கால வெப்பநிலை -50 செல்சியஸ் டிகிரிக்குக் கீழே குறைந்து, 1924-ஆம் ஆண்டில் −71.2 செல்சியஸ் டிகிரியாக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

மலைகளால் சூழப்பட்ட இந்த குடியிருப்பு பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட நுண் தட்பவெப்பநிலை மண்டலத்தைக் கொண்டிருந்தாலும், பருவநிலை மாற்றம் இப்பகுதியைப் பாதிக்கத் தொடங்கியது.

கடுமையான குளிர்காலம் குறைந்து வரும் அதே வேளையில், வெப்பமான கோடை காலமும் அடிக்கடி நிகழும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)