Ad Banner
Ad Banner
 உலகம்

சீனா வெள்ளம்; இதுவரை 34 பேர் பலி

30/07/2025 06:39 PM

பெய்ஜிங், ஜூலை 30 (பெர்னாமா) -- சீனா பெய்ஜிங்கில் பெய்த அடை மழையைத் தொடர்ந்து, மியுன் மாவட்டத்தில் உள்ள கிங்சுய் ஆறு பெருக்கெடுத்ததினால், பாலம் உடைந்தது, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையினால், இதுவரை 34 பேர் பலியாகியதோடு, 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஏராளமான வாகனங்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை மோசமடையலாம் என்று வானிலை அறிவிப்புகள் எச்சரித்துள்ளன.

மற்றொரு நிலவரத்தில், கிழக்கு ருமேனியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் சுமார் 25 கிராமங்கள் பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.

நீம்ட் மற்றும் சுசேவா மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

அங்கு இரண்டு ஆறுகள் கரைகளை கடந்ததால், 66 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)