ஜகர்த்தா, ஜூலை 30 (பெர்னாமா) -- 23 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கிண்ணம்.
நேற்று, இந்தோனேசியா, ஜெலோரா பங் கார்னோ அரங்கில் நடந்த இறுதியாட்டத்தில், 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் உபசரணை நாட்டை வீழ்த்தி, வியட்நாம் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
உத்வேகத்துடன் களத்தில் இறங்கிய அவ்விரு அணிகளும் கடுமையான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல் போடும் வேட்கையில் தீவிரம் காட்டின.
இந்நிலையில், 37-வது நிமிடத்தில் வியட்நாம் ஆட்டக்காரர் நுயென் காங் புவாங் அடித்த ஒரே கோல் முதல் பாதி ஆட்டத்தை நிறைவுச் செய்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தை 68 விழுக்காடு ஆட்கொண்டிருந்த இந்தோனேசிய அணி ஆட்டத்தைச் சமன் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியிலேயே முடிந்தது.
2022, 2023 என தொடர்ச்சியாகக் கிண்ணங்களை கைப்பற்றிய வியட்நாமின் வெற்றி இம்முறை ஹெட்ரிக் சாதனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)