டோஹா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- டோஹா கட்டாரில் நடைபெற்ற 24-வது ஆசிய இளையோர் போலிங் போட்டியில், மூன்று தங்கப்பதக்கங்களை வென்றதைத் தொடர்ந்து, மலேசிய அணி வெற்றியாளர் பட்டத்திற்கு சொந்தமாக்கியது.
இன்னும் இரண்டு பிரிவுகளுக்கான போட்டி எஞ்சியுள்ள நிலையில், மலேசியா ஐந்து தங்கப் பதக்கங்களையும் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்று இதர நாடுகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில், தேசிய அணி முதன் முறையாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
மகளிர் அணி 4,775 புள்ளிகளில் தங்கம் வென்ற வேளையில், இரண்டாவதாக, 4,563 புள்ளிகளுடன் தைவான் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
இதனிடையே, ஆடவர் பிரிவில் களமிறங்கிய மலேசியா 5,198 புள்ளிகளுடன்
முன்னிலை வகித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)