Ad Banner
Ad Banner
 பொது

விலை மற்றும் கையிருப்புக்கான தரவுகள் அமைப்பை கே.பி.டி.என் உருவாக்கும்

03/08/2025 06:58 PM

பெனாம்பாங், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 13-வது மலேசியத் திட்ட அமலாக்கத்தின் போது, விலை மற்றும் கையிருப்புக்கான தரவுகளை சேமிக்கும் மைய அமைப்பை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் உருவாக்கும்.

அதன் வழி, உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் முதல் பயனீட்டாளர் வரை, அரசாங்கம் விலைகளைக் கண்காணிக்க முடியும் என்று கே.பி.டி.என்  அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

சபா பெனாம்பாங்கில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான தேசிய கருத்தரங்கை இன்று தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் அர்மிசான் முஹமட் அலி அவ்வாறு கூறினார்.

இந்த அமைப்பு உணவுச் சங்கிலியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், விலை உயர்வினை கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக விலை நிலைத்தன்மையை கண்காணிக்கும் செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அர்மிசான் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)