கோத்தா பாரு, 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமெரிக்க தலைவர்கள் உட்பட பல தரப்பினரின் ஒத்துழைப்பால், தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதலின் அமைதி பேச்சுவார்த்தைக்கான வெற்றியும், போர் நிறுத்தமும் சாத்தியமானது.
வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் மற்றும் மலேசிய இராணுவப் படை தலைவர் ஜெனரல் டான் ஶ்ரீ முஹமட் நிசாம் ஜஃபார் ஆகியோரின் அர்ப்பணிப்பும் சிறந்த பங்களிப்பும் இந்த வெற்றிக்கு காரணம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
''பொறுப்பான ஜெனரல்களுடன் கலந்துரையாடுவதற்கு, ஆயுதப்படையினர் பெங்கோக், புனோம் பென் எல்லைக்குப் சென்றுள்ளனர். அதுதான் நமது வழி. நான் இல்லை. நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன். வெளியுறவு அமைச்சர், ஜெனரல். அப்போதுதான், முதல்முறையாக அடையப்பட்டது போல விரைவான சமரசத்தை நாம் அடைவோம். சிறப்பாக செய்ய முடியும்,'' என்றார் அவர்.
இன்று, கிளந்தான், குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சுகாதார வளாகத்தில் நடைபெற்ற கிளந்தான் மாநில மடானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை கூறினார்.
பேச்சுவார்த்தைகளின் வெற்றி அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் கவனத்தை ஈர்த்ததால், இம்முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமக்கு தொடர்பு கொண்டு பேசியதாக, அவர் தெரிவித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)