கோத்தா பாரு, 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று காலை கிளந்தான் ஃபெல்டா சிக்கு 1, ஜாலான் உத்தாமாவில், கார் ஒன்று டிரெய்லர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து காலை மணி 9.07-க்கு தகவல் கிடைத்ததாக கிளந்தான் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
காலை மணி 9.34-க்கு சம்பவ இடத்தை சென்றடைந்த போது ஹோண்டா ரக கார் ஒன்று டிரெய்லர் லாரியுடன் மோதியது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
காரில் அகப்பட்டுக் கொண்ட ஐவரில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
மேல் நடவடிக்கைக்காக உயிரிழந்தவர்களின் சடலங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)