Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சுல்தான் ஹஜி அஹ்மட் ஷா கிண்ணம்; ஜே.டி.தி வெற்றி

09/08/2025 06:20 PM

இஸ்கண்டார் புத்ரி, 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜோகூரின் ஜே.டி.தி அணி தொடர்ந்து எட்டாவது முறையாக சுல்தான் ஹஜி அஹ்மட் ஷா கிண்ண வெற்றியாளர் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நேற்று, இஸ்கண்டார் புத்ரி சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற சும்பாங்சிஹ் போட்டியில் சிலாங்கூர் எஃப்.சி-ஐ 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜே.டி.தி இந்த வெற்றியைப் பதிவு செய்தது.

சுமார் 32,777 பார்வையாளர்கள் முன்னிலையில் இப்போட்டி நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய முதலாவது நிமிடத்திலேயே ஜே.டி.தி-இன் புதிய தாக்குதல் ஆட்டக்காரர் ஜைரா டா சிலா முதல் கோலை அடித்தார்.

இதன் வழி 1-0 என ஆட்டம் நீடித்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் ஜே.டி.தி-இன் எடி இஸ்ராஃபிலோவும் 73ஆவது நிமிடத்தில் அரிஃப் ஐமானும் அடித்த கோலின் வழி அந்த அணியின் வெற்றி உறுதியானது.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு, 10-வது முறையாக சுல்தான் ஹஜி அஹ்மட் ஷா கிண்ணத்தை ஜே.டி.தி வென்றுள்ளது.

இதனிடையே, தமது அணியினரின் ஆட்டத் திறனை அதன் தலைமை பயிற்றுநர் ஜிஸ்கோ முனோஸ் இவ்வாறு பாராட்டினார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)