இந்தியா, 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியாவின் அடுத்த போர் விரைவில் ஏற்படலாம் என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் General உபேந்திர டிவேடி எச்சரித்துள்ளார்.
இதை ராணுவமற்ற மோதல் என்று அவர் கூறியிருக்கும் நிலையில், அதன் தயார்நிலை பணிகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இப்போரை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று டிவேடி கூறினார்.
இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இராணுவ உணர்வு கொண்ட குடிமக்கள் எங்கும் உள்ளதாக குறிப்பிட்டார்.
ஆளில்லா விமானங்கள் காணப்படும் இடங்கள், அவை பாதுகாப்பானதா அல்லது ஆபத்தானதா என்பதை அடையாளம் காண்பது உட்பட குடிமக்களிடம் இருந்து பெறப்படும் எந்தவொரு தகவல்களும் செயலி ஒன்றின் வழி பகிரப்பட வேண்டும் என்று டிவேடி கேட்டுக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையின் போது இந்த அணுகுமுறை சோதிக்கப்பட்டதாகவும், அது வெற்றி பெறும் பட்சத்தில் விரிவுபடுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)