செங்டு, 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்திய சந்தையை புறக்கணிக்க வேண்டும் என்ற அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலையில், டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது காட்சிக்கூடத்தை அந்த நாட்டில் தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களும் தொழிலதிபர்களும் வாஷிங்டனுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனம் தனது முதல் காட்சிக்கூடத்தை மும்பையில் திறந்து, இந்திய சந்தையில் நுழைந்தது.
தற்போது, இந்திய சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இரண்டாவது காட்சிக்கூடத்தை தொடங்கியுள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஏரோ சிட்டியில் அது அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில அரசியல் தலைவர்களும் குழுக்களும் டெஸ்லா நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தியப் பயனீட்டாளர்கள் தங்களிடையே சொந்த கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
இவ்வரி விதிப்பு விகிதம், வாகனத்தை சொந்தமாக்குவதற்கான தமது முடிவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
இன்னும் பலர், விதிக்கப்பட்ட வரிகளைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பயனீட்டாளர்கள் அமெரிக்காவிற்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்த என்றும் நினைவூட்டினர்.
ஆடம்பர பயனீட்டாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதால், அமெரிக்க சின்னத்திலான பொருள்கள் இன்னும் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)