Ad Banner
Ad Banner
 பொது

மலேசிய பொது சேவை துறையின் 16 லட்சம் ஊழியர்களில் 0.3 விழுக்காட்டினர் திவால்

13/08/2025 06:06 PM

ஜாலான் பார்லிமன், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) --   2020-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் பொது சேவை துறை ஊழியர்களில் நான்காயிரத்து 194 பேர் திவால் நிலைக்கு உள்ளாகி இருப்பதாக, மலேசிய திவால் துறையின் புள்ளிவிவரம் காட்டுகின்றது.

மலேசிய பொது சேவை துறையின் 16 லட்சம் ஊழியர்களில் இது 0.3 விழுக்காடாகும்.

கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் பொது சேவை துறை ஊழியர்களுக்கு, எ.கே.பி.கே எனப்படும் நிதி நிர்வாக ஆலோசனை நிறுவனத்தின் மூலம் ஆலோசனை சேவை, நிதி நிர்வகிப்பு உதவி மற்றும் நிதி மறுசீரமைப்பு திட்டங்களை அரசாங்கம் வழங்குவதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார்.

''பொது சேவைத் துறை, ஜே.பி.ஏ, சிந்தனை உருமாற்றத் திட்டம், பி.டி.எம் மூலம் வியூக நடவடிக்கைகளையும் செயல்படுத்தியுள்ளது. இது, புதிய அதிகாரிகளுக்குத் தனிப்பட்ட நிதி நிர்வகிப்பின் அம்சங்களில் ஆரம்பகால வெளிப்பாட்டை வழங்கும்'', என்றார் அவர்.

பொது சேவை துறை ஊழியர்களிடையே அதிகரித்து வரும் கடன் பிரச்சனைக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல் ரஹ்மான் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)