Ad Banner
Ad Banner
 உலகம்

லம்பேடுசா தீவு; படகுகள் கவிழ்ந்ததில் இதுவரை 27 பேர் பலி

15/08/2025 05:43 PM

இத்தாலி, 15 ஆகஸ்ட் (பெர்னாமா) -- லம்பேடுசா தீவிற்கு அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரு படகுகள் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 27 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் எண்மரைக் காணவில்லை.

சம்பவ நிகழ்ந்த போது, இரு படகுகளிலும் மொத்தம் 95 பேர் இருந்ததாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

உயிர் பிழைத்த 60 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சைக்காக, விமானம் மூலம் சிசிலிக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

மீதமுள்ளவர்கள் தீவின் வரவேற்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கள் தெரிவித்துள்ளது.

அதில் 21 சிறார்கள் இருந்ததாகவும், பெரும்பாலோர் சோமாலியா மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)