கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடி ஒன்றில், கடந்த புதன்கிழமை பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க, போலீசார் சில சாதகமான அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மறைக்காணி காட்சிகளை ஆராய்ந்து மதிப்பாய்வு செய்ததன் மூலம் அந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கூறினார்.
இவ்வழக்கு விசாரணைக்கு உதவ இதுவரை 14 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர், பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
ரஃபிசியின் மனைவிக்கு முதல் முறையாக செய்தி வந்தது வாட்ஸ்அப் செயலி வழியாகத்தான் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த அச்சுறுத்தல் குறித்து ரஃபிசியின் மனைவியும் ஒரு புகாரை அளித்துள்ளார்.
எம்சிஎம்சி-இன் உதவியுடன் விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த புதன்கிழமை, புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் பயணிகளை ஏற்றி இறக்கும் பகுதியில் முன்னாள் பொருளாதார அமைச்சரின் மகன் தாக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)