Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வட்டார நெருக்கடி பதிலளிப்பு ஆற்றலை வலுப்படுத்த ஆசியானிற்கு வலியுறுத்து

26/08/2025 04:39 PM

கோலாலம்பூர், 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம், ஆசியான் அதன் வட்டார நெருக்கடி பதிலளிப்பு ஆற்றலை வலுப்படுத்த வேண்டும்.

இதற்கு காரணம், தற்போது நிதி நிறுவனங்கள், எல்லைகள் மற்றும் சட்ட அமைப்புகளையும் கடந்து செயல்படுகின்றன.

இது அபாயங்களை அதிகரிப்பதோடு, கசிவுகள் வேகமாக பரவக் காரணமாக இருப்பதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

''ஆசியான்+3 மக்ரோஎகனாமிக் ஆய்வு அலுவலகம், AMRO அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை, எல்லைக் கடந்த நிதி இடைநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பைக் காட்டுகிறது. இது முறையான மற்றும் பரவும் அபாயம் என்று இரண்டு நிலைகளையும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஆசியான்+3 உரிமைகோரல்கள் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், வட்டாரத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாகவும் பகுப்பாய்வு காட்டுகிறது,'' என்றார் அவர்.

வட்டார நெருக்கடி-பதிலளிப்பு ஆற்றல் தொடர வேண்டும் என்பதை இது தெளிவுபடுத்துவதாக இன்று மலேசிய வைப்புத்தொகை காப்புறுதி அமைப்பு, பி.ஐ.டி.எம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டுக்கான தேசிய தீர்மானக் கருத்தரங்கு, என்.ஆர்.எஸ்-இல் உரையாற்றும்போது அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.

சிறு வணிகங்களை ஆதரிப்பதில் இருந்து இலக்கவியல் கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பது மற்றும் இஸ்லாமிய நிதியை மேம்படுத்துவது வரையிலான தேசிய தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து கொள்வதில் நிதித்துறை ஆற்றும் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)