Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2027-ஆம் ஆண்டுக்குள் நில எல்லைகளைத் தீர்ப்பதை விரைவுப்படுத்த மலேசியாவும் புரூணையும் ஒப்புக் கொண்டுள்ளன

27/08/2025 05:40 PM

புத்ராஜெயா, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- F-G துறைகளில் நீடித்து வரும் பிரச்சனைகளை, 2027-ஆம் ஆண்டுக்குள் அளவீடு மற்றும் குறியிடும் பணிகளை நிறைவு செய்வதற்கான இலக்கு உட்பட நில எல்லைகளைத் தீர்ப்பதை விரைவுப்படுத்த மலேசியாவும் புரூணையும் ஒப்புக் கொண்டுள்ளன.

புத்ராஜெயாவில் உள்ள ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் புரூணை சுல்தான் சுல்தான் ஹசனால் போல்கியாவிற்கும் இடையே நடைபெற்ற 26-வது மலேசியா-Brunei வருடாந்திர தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், ஏ.எல்.சி-யின்போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

அக்கூட்டத்தின்போது, ​​மலேசியாவிற்கும் புரூணைக்கும் இடையிலான வியூக ஒத்துழைப்பின் அடித்தளமாக இருக்கும் 2009-ஆம் ஆண்டு கடித பரிமாற்றம், இ.ஓ.எல்-லினால் அவ்விரு நாடுகளும் திருப்தி அடைந்தன.

2025-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி, கோலாலம்பூரில் நடைபெற்ற இ.ஓ.எல் அமலாக்கம் குறித்த 26-வது கூட்டம், குறிப்பாக F–G துறைகளில், உத்வேகத்தைப் பேணுதல், பரஸ்பர புரிதலை வலுப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கையெழுத்திடப்பட்ட குறிப்புகள் பரிமாற்றம், EON 2024 அடிப்படையிலான ஆக்கபூர்வமான அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு தீர்வு செயல்முறையை விரைவுப்படுத்தவும் கூட்டு நில எல்லைக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

2012ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை, 214.638 கிலோமீட்டர் அல்லது 41 விழுக்காட்டு நில எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)