பஞ்சாப், 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், 2,308 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Ravi, Sutlej, மற்றும் Chenab ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
இவ்வார இறுதியில் மேலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
கிழக்கு பாகிஸ்தான் லாகூரின் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் லாகூரில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியதாகவும் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை சேதமடைந்துள்ளதாகவும் உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு பொது மக்களில் சிலர் இழப்பீடு கோரி போராட்டம் நடத்தினர்.
இதுவரை, பருவமழைடினால் பாகிஸ்தானில் 820 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)