தியான்ஜின், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாராட்டிய மோடி, உக்ரேன் மீதான போருக்கு ரஷ்யா முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
''அதிபர் அவர்களே, உக்ரேனில் நிகழ்ந்து வரும் மோதல்கள் குறித்து நாம் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம். அமைதியை நிலைநாட்ட அண்மையில் முன்மொழியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம், மேலும் அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தை ஆக்கப்பூர்வமாக அணுகுவார்கள் என்று நம்புகிறோம். மோதலுக்கு விரைவான முடிவு மற்றும் அமைதியை அடைவதற்கான பாதைகளைத் தேடுவது அவசியம். இது அனைவரின் வேண்டுகோள். நண்பரே, மீண்டும் ஒருமுறை நன்றி, உங்களைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார் அவர்.
இதனிடையே, இரு நாடுகளுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நேர்மறையான விளைவுகளை காட்டுவதாக புதின் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)