நியூ யார்க், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி...
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் யன்னிக் சின்னர் காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினார்.
கசாக்ஸ்தான் அலெக்சண்டர் பப்லிக்குடன் யன்னிக் சின்னர் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டம் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் வரை நீடித்தது.
நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், தமது சகாவான லொரென்சோ முசேட்டியுடன் சின்னர் மோதவுள்ளார்.
மகளிர் பிரிவில், உபசரணை நாட்டின் கோகோ கௌஃபுடன் ஜப்பானின் நவோமி ஒசாகா விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற நேரடி செட்களில் கோகோ கௌஃபை தோற்கடித்து, ஒசாகா காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.
காலிறுதியில், 27 வயதான ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் விளையாடவிருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)