பாரிஸ், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு உலக பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது உலக பட்டத்தை கைப்பற்றும் மலேசியாவின் கனவு ஈடேறவில்லை.
நேற்று நடைபெற்ற அதிரடியான இறுதிப்போட்டியில், நாட்டின் முதன்மை மகளிர் இரட்டையரான பெர்லி தான்- எம் தினா ஜோடி, சீனாவிடம் வீழ்ந்ததில் வெள்ளி பதக்கத்துடன் நாடு திரும்பவுள்ளது.
சீனாவின் லியூ ஷெங் ஷு- தான் நிங் இணையுடன் களம் கணட அவர்கள் முதல் செட்டில் 14-21 என தோல்வி கண்டு, இரண்டாம் செட்டில் 22-20 என்று வெற்றி பெற்றனர்.
கடும் போட்டிக்கு பின்னர், வெற்றியாளரை நிர்ணையிக்கும் மூன்றாம் செட்டில் பெர்லி தான்- எம் தினா, 17-21 என்ற நிலையில் தோல்வி கண்டனர்.
உலக பூப்பந்து வெற்றியாளர் போட்டியில், இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் மலேசிய மகளிர் இரட்டையர் என்பதால், பெர்லி தான்- எம் தினாவின் இரண்டாம் நிலையும் ஒரு வரலாற்றை பதிவு செய்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)