ஜாலான் பார்லிமன், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்சனையைக் கையாள்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, மகளிர் மேம்பாட்டு செயல் திட்டத்தின் மூலம் தேசிய மகளிர் கொள்கை 2025-2030 பல முயற்சிகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதி குறியீட்டில் பெண்கள் பாதுகாப்பு துணைக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்கும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மட் தெரிவித்தார்.
இம்முயற்சி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பையும் விரிவுபடுத்தும் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் நோராய்னி கூறினார்.
''அதிகாரிகள், பயிற்சி சமூகங்கள் மற்றும் ஆதரவு உதவி உள்ளிட்ட சேவை வழங்குவதை வலுப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்கும் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்'', என்றார் அவர்.
மேலவை கூட்டத்தின்போது, அக்கொள்கையால் கொண்டு வரப்பட்ட புதிய அணுகுமுறை குறித்து செனட்டர் டத்தோ ரொஸ்னி சொஹாரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் முறைசாரா துறையில் பெண்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைச் செயல்படுத்துவதன் மூலம் இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் முறைசாரா துறையில் பெண்களை மேம்படுத்துவதில் PTPW கவனம் செலுத்துவதாக டாக்டர் நோராய்னி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)