சைபர்ஜெயா, 09 செப்டம்பர் (பெர்னாமா) - ரோன் 95 உதவித் தொகை தொடர்பில், பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் மீதான, குற்றச்சாட்டு குறித்த விசாரணையை, தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி இன்னும் தொடர்கிறது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட உள்ளடக்கத்தின் தொடக்கக்கட்ட மதிப்பாய்வு சம்பந்தப்பட்ட தள வழங்குநர்களுடன் இணைந்து நடத்தப்பட்டதாக ஓர் அறிக்கையில் எம்.சி.எம்.சி தெரிவித்தது.
விசாரணையை நிறைவு செய்வதற்காக டிக் டோக்கிலிருந்து கூடுதல் தகவல் பெறுவதற்காக தமது தரப்பு இன்னும் காத்திருப்பதாக எம்.சி.எம்.சி கூறியது.
அடுத்தக்கட்ட விசாரணை மற்றும் அறிவுறுத்தல்களுக்காக இவ்விவகாரம் தொடர்பிலான விசாரணை முடிவுகள், அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் பார்வைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, விசாரணைகள் நேர்த்தியாகவும் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து எம்சிஎம்சி ஒத்துழைப்பை மேற்கொள்ளும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)