பாரோய், டிசம்பர் 25 (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக்..
நேற்றிரவு சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் எஃப்.சி 2-0 என்ற கோல்களில் கிளந்தான் எஃப்.சி-ஐ தோற்கடித்தது.
பாரோய் அரங்கில், நடைபெற்ற இந்த ஆட்டத்தை நெகிரி செம்பிலான் எஃப்.சி முழுவதுமாக ஆக்கிரமித்ததால் எளிதில் வெற்றி அடைந்தது.
அதில் இரு கோல்களை அடித்த, நெகிரி செம்பிலான் தாக்குதல் ஆட்டக்காரர் லுக்மான் ஹகிம் ஷம்சுடின் அரங்கின் கவனம் ஈர்த்தார்.
இந்த வெற்றியின் வழி, அவ்வணி பட்டியலில் ஆறாம் இடத்தைப் பிடித்திருக்கும் வேளையில், தோல்வி கண்ட கிளந்தான் பத்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மற்றுமொரு நிலவரத்தில், தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மலாக்கா எஃப்.சி இம்முறையும் தனது சொந்த இடத்தில் தோல்வி கண்டது.
மலாக்காவின் ஹங் ஜெபாட் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், இமிகிரேஷன் எஃப்.சி 2-0 என்ற கோல்களில் மலாக்கா எஃப்.சி-ஐ வீழ்த்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)