Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக்: ஆஸ்டன் வில்லாவை தோற்கடித்தது மென்-யு

16/03/2026 06:40 PM

இங்கிலாந்து, 16 மார்ச் (பெர்னாமா) -- Old Trafford அரங்கில் நேற்றிரவு, நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் Aston Villa-வை வீழ்த்தி மென்செஸ்டர் யுனைடெட் மூன்றாம் இடத்தில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.  

இன்னும் எட்டு ஆட்டங்கள் எஞ்சி இருந்தாலும், ஐரோப்பிய வெற்றியாளர் லீக்கின் அடுத்த பருவத்தில் தானாகவே தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும், இவ்வெற்றியின் வழி மென்செஸ்டர் யுனைடெட் பிரகாசமாக்கியுள்ளது. 

முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி நிறைவடைந்தது. 

இந்நிலையில், இரண்டாம் பாதியின் 53-வது நிமிடத்தில் பிரேசிலின் காசெமிரோ, மென்.யூ-க்கான முதலை கோலை போட்ட வேளையில்,

11 நிமிடங்களுக்குப் பிறகு, தமது அணிக்கு வழங்கப்பட்ட பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்டன் வில்லாவிற்கான ஒரே கோலை ரோஸ் பார்க்லி போட்டார். 

எனினும், ஆட்டத்தின் 71 மற்றும் 81-வது நிமிடங்களில் மென்.யூ-க்கான இரண்டாவது, மூன்றாவது கோல்களை மேத்தியஸ் குன்ஹாவும் பெஞ்சமின் செஸ்கோவும் அடித்தனர்.  

54 மொத்த புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மென்.யூ தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]