Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பினாங்கில் மீண்டும் தேவாவின் இசை நிகழ்ச்சி

10/03/2026 07:28 PM

ஜார்ஜ் டவுன், 10 மார்ச் (பெர்னாமா) -- மலேசியாவில் தொடர்ந்து இசைப் பயணங்களை மேற்கொண்டு வரும் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளார் தேவா மீண்டும் பினாங்கில் தமது ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றார். 

பினாங்கு Setia Spice Arena-வில் வரும் மார்ச் 28-ஆம் தேதி  நடைபெறும் இசை நிகழ்ச்சியின் வழி சுமார் 40 பாடல்களோடு தமது ரசிகர்களை உற்சாப்படுத்த தயாராகி வருவதாக தேனிசைத் தென்றல் கூறியுள்ளார். 

90-ஆம் ஆண்டுகளின் நினைவுகளை மீட்டெடும் பாடல்களோடும் ரசிகர்கள் விருப்பத் தேர்வுகளோடும்  'Thenisai Baasha Deva Live In Penang'  எனும் இந்த இசை நிகழ்ச்சி நான்கு மணிநேரத்திற்கும் கூடுதலாக நடைபெறவிருக்கின்றது.

கோலாலம்பூர், பினாங்கு மற்றும் ஜோகூர் பாருவில் நடைபெற்ற தமது முந்தைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு இம்முறை புதிய அனுபவத்தைக்  கொடுக்க பாடல் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்படுவதாக 
தேவா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமது மகன் ஶ்ரீ காந்த் தேவா, பிரபல பின்னணி பாடகர் மனோ, பாடகி அனுராதா ஶ்ரீ ராம் உட்பட சிறந்த பாடகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். 

கூடுதலாக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நட்சத்திரங்களும்  ரசிகர்களை மகிழ்விக்க போவதாக தேவா கூறினார்.

இதனிடையே, முதல் நாளில் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறும் அதே அரங்கில் மறுநாள் பாடகர் நரேஷ் ஐயர் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறுவதால்..

ஒரே விலையில் டிக்கெட் வாங்கி அவ்விரண்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை ரசிகர்கள் பெறுவதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டாக்டர் குகிலன் புஸ்பநாதன் கூறினார். 

அமரும் இடங்களுக்கு  ஏற்ப 99 ரிங்கிட் முதல் 1,999 ரிங்கிட் விலையில் டிக்கெட் விற்பனையாகும் நிலையில் அதனை வாங்க விரும்புவோர் www.greatticket.my இணைய பக்கத்தை நாடாலாம். 

நிகழ்ச்சிகளில் வரும் வருமானத்தின் ஒரு பகுதி பினாங்கில் உள்ள   தமிழ்ப்பள்ளிகளுக்கும், தொண்டுழிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என நேற்று பினாங்கு ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குகிலன் தெரிவித்தார். 

-- பெர்னாமா