Ad Banner
Ad Banner
 உலகம்

படகு மூழ்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை

28/12/2025 04:38 PM

லபுவான் பாஜோ, 28 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான லபுவான் பாஜோ அருகே, சுற்றுப்பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் மூழ்கியதில் ஸ்பெயின் நாட்டின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை.

விபத்து நிகழ்ந்தபோது, அப்படகில்  11 பேர் பயணித்ததாக போலிஸ் கூறியது.

இவ்விபத்து வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததை போலீஸ் உறுதிப்படுத்தினர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடரப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேலும் இரு சுற்றுலாப் பயணிகள், நான்கு பணியாளர்கள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி என இதர பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]