சொலொலா, 28 டிசம்பர் (பெர்னாமா) -- குவாட்டமாலா, சொலொலா எனும் பகுதியில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை நிகழ்ந்த இவ்விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்.
நள்ளிரவில், குவாத்தமாலா நகரத்திலிருந்து சன் மார்கொஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியாளர்களும் சுமார் 20 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
சுமார் இரண்டரை மணி நேரம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குவாட்டமாலாவின் மலைப்பாங்கான நெடுஞ்சாலைகள், செங்குத்தான நிலப்பரப்பு மற்றும் சவாலான சாலை அமைப்புகள் ஆகியவற்றால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பேருந்து விபத்துக்கள் அங்கே அடிக்கடி நிகழ்கின்றன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]