ஜோகூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- பாகோ, புக்கிட் கெப்போங்கில் இன்று காலை மணி 8.55-க்கு 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்தது.
பாகோவில் இருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டார் தொலைவில் ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று தனது முகநூல் பதிவில் அத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்நிலநடுக்கத்தினால் எந்தவோர் உயிருடற்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று, ஜோகூர் மாநில மந்திரி புசார் டத்டோ ஒன் ஹஃபிஸ் காசி தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்துவதோடு தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நெருக்கமான கண்காணிப்பை மாநில அரசாங்கம் எப்போதும் மேற்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.
நிதானமாக இருப்பதோடு, உறுதியற்ற கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு, எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]