Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலக்கம்

30/12/2025 03:27 PM

கோலாலம்பூர், டிசம்பர்  30 (பெர்னாமா) --  ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டாக்டர் சஹ்ருட்டின் ஜமால் அப்பதவியிலிருந்து விலகுவதாக இன்று தமது முகநூலில் அறிவித்துள்ளார்.

ஜோகூர் மந்திரி புசார் பதவியை 'இழப்பது' குறித்த தமது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் புன்னகைக்கும் அடையாளத்தை அவர் தமது பதிவில் பயன்படுத்தினார்.

மேலும், ஜோகூர் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்டாக்டர் சஹ்ருட்டின் ஜமால் ஜோகூர் மாநிலத்தின் 17-வது மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார்.

வழக்கமாக பெரிக்காத்தான் நேஷனல் கட்சியில் மாநில அளவில் தலைவரைப் பதவியை நிர்ணயிப்பது மத்திய அளவில் உள்ள தலைவரே என்பதால் முகிடின் பதவி விலகுவதாக முடிவெடுத்ததைத் தொடர்ந்து தாமும் தமது பதவியை விட்டு விலகுவதே நியாயமானது என்று பெர்னாமா தொடர்புக் கொண்டபோது டாக்டர் சஹ்ருட்டின் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)