புத்தாண்டை வரவேற்க அதன் முதல் நாளான நேற்று மக்கள் பெவிலியன் கோலாலம்பூர், கே.எல்.சி.சி இரட்டைக் கோபுரம் மற்றும் கோலாலம்பூர் கோபுரம் ஆகிய பகுதிகளில் கூடி வண்ணமய வாணவெடிகளைக் கண்டு களித்தது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
பெவிலியன் கோலாலம்பூர் முன்புறம் Visit Malaysia 2026 Countdown Festival நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது 2026 மலேசியாவைச் சுற்றிப்பார்க்கும் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டதைக் காட்டுகிறது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி வாணவெடியுடன் பல்வேறு கலாச்சார படைப்புகளுடன் கலைகட்டியது.
அதோடு, Esplanade KLCCயில் நடத்தப்பட்ட Rhythm of KLCC 2026 நிகழ்ச்சியில் வாணவெடி மற்றும் 'tower light show’ போன்றவற்றைக் காண அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இதனிடையே பேராக், Sunway Lost World of Tambunனிலும் Ring in The Flame என்ற வாணவெடி நிகழ்ச்சியைக் காண சுமார் ஐந்தாயிரம் பேர் அங்கு கூடினர்.
சரியாக மணி 12க்குப் பட்டாசு மற்றும் வாணவெடிகளுன் அந்நிகழ்ச்சி கலைக்கட்டியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)