சிலாங்கூர், ஜனவரி 3 (பெர்னாமா) -- மாற்றங்கள் அல்லது சீர்திருத்தங்கள் ஆட்சியில் இருக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர ஆட்சியில் இல்லாதபோது அல்ல.
கடந்த கால அனுபவங்களில் ஆட்சியில் இல்லாதபோது சத்தமாகப் பேசிய தலைவர்கள் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற பின்னர் பொருத்தமான மாற்றங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டனர் என்றும் அதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
''நீண்ட காலமாக பிரதமர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருந்தவர்களின் அனுபவத்தை நான் பின்பற்ற விரும்பவில்லை. அவர்களுக்கு அதிகாரம் இருக்கும்போது. அவர்களிடம் செல்வம் இருந்தபோது, அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அதிகாரம் இல்லாதபோது. அவர்கள் பல நாட்கள் முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள். நிறைய.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
இன்று, ரவாங், புக்கேட் பெருந்தொங்-கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு குடும்ப தினம் மற்றும் தேசிய சீர்த்திருத்த நாள் கொண்டாட்டதின்போது உரையாற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
மாற்றங்கள் நிதானமாகவும் விவேகத்துடனும் செய்யப்படுவதோடு மடானி அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைமைத்துவங்களின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் வழியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அன்வார் எடுத்துரைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)