ஆஸ்திரேலிய, ஜனவரி 6 (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் சிறந்த மனநிலையோடு களமிறங்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக அடிலெய்டு-ல் நடைபெறவிருக்கும் போட்டியில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.
24 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான அவர் சமூக ஊடக அறிக்கையின் வழி இந்த அறிவிப்பை வெளியிட்டு தமது நிலை தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.
அந்த போட்டி அவருக்குப் பல இனிய நினைவுகளைக் கொடுத்திருக்கும் நிலையில் பங்கேற்காத இம்முடிவு தமக்கு வருத்தமளிப்பதாக செர்பிய ஆட்டக்காரரான நோவக் ஜோகோவிச் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய போட்டிக்கு முன்னதாக முழுமையான தயார்நிலை பணிகளை உறுதி செய்வதே தற்போது அவரது முக்கிய கவனமாகியுள்ளது.
11-வது ஆஸ்திரேலிய பட்டத்தோடு தமது டென்னிஸ் வாழ்வில் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்வதில் அவர் தற்போது இலக்கு கொண்டுள்ளார்.
அவ்விரண்டையும் அவர் கைப்பற்றும் பட்சத்தில் ஆடவர் டென்னிஸ் வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)