Ad Banner
 உலகம்

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது

08/01/2026 04:39 PM

அமெரிக்கா, 08 ஜனவரி (பெர்னாமா) -- வெனிசுலாவிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற ஒரு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

புதன்கிழமை அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்காக அக்கப்பல் தற்போது அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி அக்கப்பலைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் காணொளியை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது.

கப்பல் தரவுகளின்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் அக்கப்பல் வெனிசுலா கடற்பரப்பிலிருந்து புறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சீனாவிற்கு எண்ணெய் அனுப்பும் கப்பல்களில் அக்கப்பலும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)