லண்டன், 14 ஜனவரி (பெர்னாமா) -- இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் இடைக்கால நிர்வாகியாக மைக்கேல் கேரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பருவம் முடியும் வரை நிர்வாகியாக இருப்பதோடு, அந்த கிளப்பை மீண்டும் வெற்றியாளர் லீக் போட்டிக்கு அழைத்து செல்லும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் ஆட்டக்காரர்ராக 12 ஆண்டுகால பயணத்தில் 12 முக்கிய கிண்ணங்களை வென்ற மைக்கேல் கேரிக், இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டில் இதேபோன்று இடைக்கால நீர்வாகியாக பொறுப்பேற்றபோது, மூன்று போட்டிகளில் தோல்வியின்றி அணியை வழிநடத்தி சாதனை படைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 2022 அக்டோபரில், இரண்டாம் டிவிஷனில் உள்ள மிட்லெஸ்ப்ரோட் கிளப்பின் நிரந்தர நிர்வாகி பொறுப்பை ஏற்றார்.
இருப்பினும், வெற்றியாளர் லீக்கில் அக்கிளப் 10-வது இடம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் கேரிக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஓல்ட் டிராஃபோட் அரங்கில் கடந்த 14 மாதங்கள் ஏமாற்றமளிக்கும் முடிவுகள் கொடுத்தை அடுத்து முன்னாள் நிர்வாகி ரூபன் அமோரிமை அக்கிளப் நீக்கியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)