வாஷிங்டன் டி.சி, 09 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், காங்கிரசின் அங்கீகாரமின்றி வெனிசுலா மீது மேலும் இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் ஒரு தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றம் முன்வைத்துள்ளது.
அத்தீர்மானம் 100 உறுப்பினர்களைக் கொண்ட அச்சபையில், இவ்விவகாரம் குறித்து மேலும் பரிசீலிக்க வழிவகுக்கும்.
போர் அதிகாரங்கள் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான செயல்முறை நடவடிக்கையின் மீதான வாக்கெடுப்பு 52-க்கு 47-ஆக இருந்தது.
ஏனெனில், டிரம்பின் ஒரு சில குடியரசுக் கட்சியினர் ஒவ்வொரு ஜனநாயகக் கட்சியினருக்கும் ஆதரவாக வாக்களித்தனர்.
அமெரிக்கப் படைகள் கராகஸில் இராணுவத் தாக்குதலை மேற்கொண்டு, வெனிசுலா அதிபர் நிகொலஸ் மடூரோ சிறைப்பிடித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
ரூபியோவும், டிரம்ப் நிர்வாக அதிகாரிகளும் வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தைத் திட்டமிடவில்லை என்று வலியுறுத்தி தங்களிடம் பொய் கூறியதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனிடையே, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மக்சாடோ அடுத்த வாரம் வாஷிங்டனுக்கு வருகை புரியவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.
அச்சந்திப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டபோது அத்தரப்பு உடனடியாக பதிலளிக்கவில்லை.
அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பிறகு, டிரம்புடன் இன்னும் பேசவில்லை என்று இவ்வார தொடக்கத்தில் கூறிய மக்சாடோவுடனான டிரம்பின் முதல் சந்திப்பு இதுவாகும்.
வெள்ளை மாளிகையில் எண்ணெய் நிறுவன நிர்வாகிகளைச் சந்திக்கவுள்ள டிரம்ப், அந்த எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)