Ad Banner
 பொது

சட்டவிரோத குடியேறிகளைக் கடத்தும் புதிய தந்திரம் அம்பலம்

11/01/2026 03:55 PM

கிள்ளான், 11 ஜனவரி (பெர்னாமா) -- அதிகார தரப்பின் கண்களை மறைப்பதற்காக, தற்போது உள்ளூர் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் கொண்டு வரும் கடத்தல் கும்பலின் புதிய மோசடி நடவடிக்கையை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் ஏ.பி.எம்.எம் கண்டறிந்துள்ளது.

நேற்று அதிகாலை சுங்காய் பெசார் ஆற்றுப் பகுதியில், மீன்பிடி படகை ஒன்றை, சிலாங்கூர் மாநில ஏ.பி.எம்.எம் கைப்பற்றியதன் மூலம், 27 சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதில், அவர்களின் தந்திரம் அம்பலமானது.

மீன்பிடித் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதை அக்கும்பல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக சிலாங்கூர் கடல்சார் இயக்குநர் கேப்டன் மரிதிம் அப்துல் முஹைமின் முஹமட் தெரிவித்தார்.

''செயல்முறை தந்திரத்தின் அடிப்படையில், அதிகாரிகளின் கண்காணிப்பை ஏமாற்றுவதற்காக இக்கடத்தல் கும்பல் தற்போது உள்ளூர் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தும் புதிய உத்தியைக் கையாள்வது கண்டறியப்பட்டுள்ளது. மீன்பிடித் துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி அவர்கள் ஊடுருவ முயற்சிக்கின்றனர்,'' என கேப்டன் அப்துல் முஹைமின் முஹமட் சாலே கூறினார். 

உளவுத் தகவலின் அடிப்படையில், தங்கள் தரப்பு நள்ளிரவு 12.35 மணியளவில் சுங்கை பெசார் ஆற்றுப் பகுதியை நெருங்கியபோது சந்தேகக முறையில் ஒரு படகு நகர்வதைக் கண்டறிந்ததில், இந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக மாநில ஏ.பி.எம்.எம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்துல் முஹைமின் தெரிவித்தார்.

படகைச் சோதனை செய்ய முயன்றபோது, ஒத்துழைக்க மறுத்து, அதன் செலுத்துனர் தப்பிச் செல்லும் நோக்கத்தில்அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு கடலில் குதித்தார்.

இருப்பினும், அவர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)