Ad Banner
 பொது

GROK ஏ.ஐ-யை பயன்படுத்த தடை

11/01/2026 05:06 PM

கோலாலம்பூர், 11 ஜனவரி (பெர்னாமா) -- இன்று தொடங்கி, மலேசிய இணைய பயனர்கள், grok செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ-யை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படுவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

ஆபாசம் மற்றும் வெளிப்டையான பாலியல் உள்ளடகங்களை உருவாக்க, Grok தவறாக பயன்படுத்தப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.சி.எம்.சி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை வழி அறிவித்துள்ளது.

மிகவும் ஆபாசம் நிறைந்த உள்ளடக்கம், அனுமதி இல்லாமல் மாற்றப்பட்ட படங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்கள் சம்பந்தப்பட்ட உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.சி.எம்.சி கூறியுள்ளது.

இது தொடர்பில், கடந்த ஜனவரி 3 மற்றும் 8-ஆம் தேதிகளில், X Corp. மற்றும் xAI LLC ஆகிய நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தக் கோரி அறிவிக்கை அனுப்பட்டுள்ளதாக எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

சட்டம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இத்தடை ஒரு முன்னெச்சரிக்கை என்று எம்.சி.எம்.சி கூறியது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)